மாணவி குளிப்பதை காணொளி எடுத்த இளம் குடும்பஸ்தர் கைது
வவுனியாவில் (Vavuniya) 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை காணொளி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஆலயம் ஒன்றின் கட்டுமாணப் பணி இடம்பெற்று வருகின்றது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், குறித்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்ட 35 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது வேலியால் மாணவியை காணொளி எடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரது தொலைபேசி இராசாயன பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 17 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri