தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு - வீட்டில் உயிர் தப்பிய அதிசயம்
காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் முன் ஒரு நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
