யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு நபர் தப்பியோட்டம்
யாழ். தெல்லிப்பழையில், நேற்றையதினம் கைது செய்ய சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது குறித்த சந்தேகநபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து, பொலிஸார் மீது கொட்டனால் தாக்குதல் நடாத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனை தொடர்ந்து, குறித்த சந்தேகநபரை தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
