கிளிநொச்சி வீதி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
கிளிநொச்சி- தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் சந்திப்பகுதியில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்து
கடந்த 23.01.2026 அன்றைய தினம் மாலை தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிகுளம் சந்திப்பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேலை எதிரே வந்த கப் ரக வாகனம் மோதியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபர் கிளிநொச்சி மற்றும் யாழ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(26) உயிரிழந்துள்ளார்.

விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர், சுண்டிகுளம் சந்திப் பகுதியைச் சேர்ந்த ஆதி மூலம் சிவகுமார் 55 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் தொடர்புடைய வாகன சாரதி தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri