பொல்பிட்டிய நீர்த்தேக்க அணையில் குதித்த நபர் சடலமாக மீட்பு
பொல்பிட்டிய, போட்லண்ட் நீர்த்தேக்க அணையின் பாலம் மீதிருந்து கெசல்கமு ஓயாவுக்குள் குதித்து காணாமல் போயிருந்த நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, மேற்படி நபரின் சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பல்லேவத்தை, பொல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணை
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் தனது வீட்டில் இருந்து நீர்த்தேக்க அணை வழியாக ஓடிவந்து எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் குதித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri