நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி
நுவரெலியா, கந்தப்பளையில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம்(26.04.2025) நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் கந்தப்பளை புதிய வீதி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தேடிய தொழிலாளர்கள்
இந்த முதியவர் நீண்டகாலமாக குறித்த விவசாயத் தோட்டத்தில் தற்காலிக குடிசை ஒன்றினை அமைத்து தங்கியிருந்து தினமும் தொழில் புரிந்து வந்தவர் எனவும் வழக்கம் போல் இன்று தொழில் செய்வதற்கு காலை விவசாய தோட்டத்திற்கு சென்றதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
எனினும், முதியவருடன் இணைந்து தொழில் புரியும் ஏனைய தொழிலாளர்கள் நீண்ட நேரமாகியும் முதியவர் தொழில் புரிவதை காணாது அவர் தங்கியிருந்த குடிசைக்கு வந்து தேடியுள்ளனர்.
அங்கு அவர் இல்லாததால் விவசாயத் தோட்டத்தில் தேடிய போது அவர் சடலமாகக் கிடந்தமையை அவதானித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இதன் பின்னர், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தபளை பொலிஸாருடன் நுவரெலியா தடயவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
