நடுவானில் விமானத்திலேயே பயணி ஒருவர் மரணம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற இந்திய பயணி ஒருவர் மாரடைப்பால் மரணமானார்.
ஆந்திராவை சேர்ந்த 45 வயதான கமல் பாசா என்பவரே, நடுவானில் விமானத்திலேயேஉயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் முதலுதவி அளிப்பு
விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது, இடையில் தமக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ள நிலையில், விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்துள்ளனர்.
அத்துடன், அவசர உதவிக்காக சென்னை விமான நிலையத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பயணியின் உயிரைக் காக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
