கனடாவில் தமிழர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி
கனடாவின் - Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அஜாக்ஸில் உள்ள கிங்ஸ் கேஸில் பார் மற்றும் கிரில்லுக்கு வெளியே இரண்டு பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர், அப்போது ஒருவர் கத்தியால் மற்றவரை குத்தினார்.

இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதிக்கப்பட்டவரின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. இது இப்பகுதியில் இந்த ஆண்டில் நடந்த 11வது கொலையாகும்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 33 வயதான சந்தேகநபருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறை கூறுகிறது.
கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் அதே வாகன தரிப்பிடத்தில் வாகனம் ஒன்றில் மோதப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam