ட்ரம்பை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நீதிமன்றம் ஆயள் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த 2024 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ட்ரம்பை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 59 வயதான ரயன் ரவுத் என்பவருக்கு நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டதனை தொடர்ந்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
புளோரிடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் பாம் பீச் நகரில் அமைந்துள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கழகத்தில், டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பை கொலை செய்யும் நோக்கில், அரை தானியங்கி துப்பாக்கியுடன் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக புதர்களுக்குள் மறைந்திருந்ததாக ரவுத் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பின்னர், அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் அவரை கண்டுபிடித்தனர்.

ஒரு மனித உயிரை பறிக்க முன்கூட்டியே திட்டமிட்டு, கணக்கிட்ட முறையில் நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள் என்பது எனக்கு தெளிவாக உள்ளது என இந்த வழக்கில் தீர்ப்பளித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி கேனன், கூறினார்.
விசாரணை காலத்தில், ரவுத் தானே தனது வழக்கை தானே வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்குமாறு ரவுத் நீதிபதியிடம் கோரியிருந்தார்.
எனினும், அமெரிக்க ஜனநாயகத்தை கவிழ்க்கும் நோக்குடன் இந்த குற்றம் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறிய அரசு தரப்பு, ஆயுள் தண்டனையே பொருத்தமானது என வலியுறுத்தியது.
இந்த சம்பவம் கடந்த 2024 செப்டம்பர் 15ம் திகதி இடம்பெற்றது.
அதற்கு முன்பு, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் ட்ரம்பின் காதை குண்டு ஓரமாகத் தாக்கிய மற்றொரு கடுமையான கொலை முயற்சியையும் அவர் உயிர்தப்பியிருந்தார்.
சம்பவம் நடந்த நாளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ரவுத் தென் புளோரிடாவிற்கு வந்திருந்தார். அவர் ஒரு லாரி நிறுத்துமிடத்தில் தங்கி, டிரம்பின் அசைவுகள் மற்றும் நேர அட்டவணை குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதேவேளை, நீதிமன்றத்தில் முன்னிலையான ரவுத், வெளிநாட்டு மோதல்கள் குறித்து குழப்பமான கருத்துகளை வெளியிட்டதுடன், வெளிநாடுகளில் உள்ள அரசியல் கைதிகளுக்குப் பதிலாக தன்னை பரிமாற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் நன்மை செய்ய, தம்மிடம் இருந்த அனைத்தையும் தாம் ஒவ்வொரு நாளும் அர்ப்பணித்துள்ளதாக ரவுத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ட்ரம்பை கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரவுத் மறுத்துள்ளார்
மேலும், சிறையில் இருக்கும் காலத்தில் உளவியல் சிகிச்சை பெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam