கொழும்பில் இளம் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி
கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை ஏமாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாக 35 வயதான நபரும் 21 வயது யுவதியும் காதல் தொடர்பில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என அறிந்த யுவதி, அந்த உறவில் இருந்து விலகியமையினால் கோபம் அடைந்த குடும்பஸ்தர் இந்த செயலை செய்துள்ளார்.
மோசமான செயல்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரியை வசிக்கும் 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, ஒரு வருடமாக அந்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 29 நிமிடங்கள் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
