மட்டக்களப்பில் பாம்பு தீண்டி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக இன்று(01.07.2025) மாலை நடந்து வந்து கொண்டிருந்த போது, பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருநீற்றுக்கேணியிலள்ள குறித்த நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
