ஆடுகளை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் என கூறியதால் மண்வெட்டியால் தாக்குதல்
திருகோணமலை - நொச்சிக்குளம் பகுதியில் மண்வெட்டியால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (21.11.2022) பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் நொச்சிக்குளம் - சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் ராஜேந்திரன் (65 வயது) என்பவரே தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்
ஆடுகளை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் என கூறிய போது ஆட்டு உரிமையாளர் தன்னை மண் வெட்டியால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளானவர் கை உடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள
நிலையில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri