மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராம பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தாழ்வுபாடு கிராம பகுதியில் 10 கிலோ 370 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இளைஞர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதோடு, அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய மன்னார் கீரி பகுதியை சேர்ந்த இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri