வவுனியாவில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பாேதை பாெருளுடன் ஒருவர் கைது
வவுனியாவில்(Vavuniya) போதை மாத்திரைகள் மற்றும் ஹெராேயின் பாேதை பாெருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று(7) தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் தேக்கவத்தை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன் போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1000 போதை மாத்திரைகள் மற்றும் 2200 மில்லிகிராம் ஹெராேயின் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
