திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் 5 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
03ஆம் கட்டை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு வரும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் 03 கட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
குறித்த சந்தேக நபரிடமிருந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri