கண்டியில் எட்டு தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது
எட்டு தேசிய அடையாள அட்டைகளை (National Identity Card) தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கண்டியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி- எசல பெரஹெராவை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மேற்குறித்த நபர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்
நடப்பு வருடத்தின் ரந்தோலி பெரஹெராவைக் கண்டுகளிக்க பெருமளவான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சிவில் உடை பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரஹெராவைப் கண்டுகளித்தல் என்ற சாக்கின் கீழ் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் பொதுமக்களிடையே நடமாடக் கூடும் என்பதால், சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
