கனடாவில் தமிழர் ஒருவர் செய்த மோசடி
கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive, Scarboroughவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தியிருந்தார். இதனையடுத்து விளம்பரத்தை பார்த்து குறித்த நபரை சந்திக்க வந்தவருக்கு குடியிருப்பு காண்பிக்கப்பட்டதுடன் அந்த இடத்தின் உரிமையாளர் தான் எனவும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
இந்நிலையில், வாடகைக்கு ஒப்புக்கொண்ட பின்னர், மின்னணு பணப்பரிமாற்றம் உட்பட்ட வழிகளில் வைப்பு தொகை அனுப்பி வைக்கப்பட்டதுடன், பணம் செலுத்தியவர்களுக்கு குடியிருப்பிற்கு செல்வதற்கு திகதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், சில காரணங்களுக்காக அந்த திகதி பிற்போடப்பட்டதுடன், பணம் வழங்கியவர்களின் அழைப்புக்கு பதில் வழங்குவதையும் அந்த நபர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே டொரோண்டோவை சேர்ந்த 43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர் அல்லது வைப்பு தொகை வழங்கு முன்னர் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வாடகைக்கு உள்ளது என்பதை கட்டிட உரிமையாளரிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan