கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (05) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 44 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடனேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
சம்பவத்தில், குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பஹ்ரைன் நாட்டிலிருந்து இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 25,400 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 127 சிகரெட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணை
சந்தேக நபர் இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளை துபாயில் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri