வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி மேற்கொள்ளப்பட்ட வன்முறை! வெளியான தகவல்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டு விட்டு 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழி நடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரே இந்த கைது மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது கைது நடவடிக்கைகளின் தொகுப்பு,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
