கொழும்பில் பல பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நபர் கைது
கொழும்பில் வீதியில் பயணித்த பல பெண்களின் தங்க சங்கிலிகளை பறித்து அச்சத்தை ஏற்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான, உடஹமுல்ல பிரதேசத்தில் பல பகுதிகளில் பெண்களிடம் தங்க நகைகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர் படல்கம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கிரிபத்கொட மற்றும் ராகம பிரதேசத்தில் இரண்டு பெண்களிடம் தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.