கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்
அவர் கனடாவிலிருந்து கட்டார், தோஹாவிற்கு போதைப்பொருள் கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து, அவர் கட்டார், எயபர்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் 12 கிலோகிராம் 196 கிராம் ஹஷிஷ் மற்றும் 05 கிலோகிராம் 298 கிராம் கோகைனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரும் அவர் கொண்டு வந்த போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.




