மட்டக்களப்பில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
பயணத்தடையின் போது மட்டக்களப்பு முகத்துவாரம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரைக் கால் போத்தல் கொண்ட 150 மதுபானப் போத்தல்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்கேதநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு தலைமையக மதுபோதை ஒழிப்பு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு பாலைமீன்மடு பிரதேசத்திலுள்ள குறித்த வீடு ஒன்றினை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 6 கடதாசிப் பெட்டிகளிலிருந்து கால் போத்தல்கள் கொண்ட 150 மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam