புத்தளத்தில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட நபர் கைது
புத்தளம் நுரைச்சோலை பகுதியில் பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட சிலர் தப்பியோடிய நிலையில் கலேவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இன்று (06.10.2024) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 2500 கிலோ பீடி இலைகளுடன் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், லொறி மற்றும் வானுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரி ஜீவன் குமாரவிற்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலை இழந்தையடி கரையோரப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களுக்கு ஏற்றிக்கொண்டிருந்த வேளை, சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஒரு கோடி பெறுமதியானவை
பீடி இலைகள் மூடைகளை கைவிட்டுவிட்டு சிலர் தப்பியோடியுள்ளதாகவும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட
லொறி ஆகியவை, கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக
நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |