வெளிநாட்டிலிருந்து வந்த கொழும்பை சேர்ந்த நபர் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (07) காலை டுபாயில் இருந்து வந்தடைந்த போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, வெல்லம்பிட்டியவில் வசிக்கும் 48 வயதுடைய சாரதி ஆவார்.

மேலும் அவரது சூட்கேஸில் 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் அட்டைப் பெட்டிகள் மற்றும் ஒரு பெட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டு, அதிகாரியால் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகை தொடர்பான மேலதிக விசாரணைக்காக 10 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam