சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பொதியை எறி்ந்த நபர் கைது
மாத்தறை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசியெறிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது, இன்று ( 02.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பொதி ஒன்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள்களுடன் மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசியெறிந்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பொதி தொடர்பான பரிசோதனை
இதனையடுத்து, சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய நபர் தப்பியோடியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாத்தறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மாத்தறை சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.
மேலும், சிறைக்குள் வீசியெறியப்பட்டிருந்த பொதி குறித்து மேற்கொண்ட பரிசோதனையின் போது போதைப் பொருள், கையடக்க தொலைபேசி மற்றும் புகையிலை உள்ளிட்ட ஏனைய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்தாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan