விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக கூறப்படும் ஒருவரை வத்தளை பிரதேசத்தில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் தாம் கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுத் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் சென்று மிரட்டிய நபர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட கெப் வண்டி, போலி இலக்கத்தகடு, விளையாட்டுத் துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் நேற்றைய தினம் ஜா-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் சென்று வீட்டில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், விளையாட்டுத் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் சென்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.