யாழின் பல பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றைய தினம் (21) காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பல்வேறு பகுதிகளில் அவர் துவிச்சக்கர வண்டிகளை திருடிய சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய 12 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைதான சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி பொலிஸார் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
