இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு பேருந்தில் நடந்த சோகம்: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்
பேருந்தில் பயணித்த இரு இந்திய சுற்றுலாப் பயணிகளின் பெறுமதிமிக்க பொதிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அவிசாவளை - ஹேவாயின்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுற்றுலா பயணிக்கு நேர்ந்த சோகம்
நேற்றுமுன்தினம் (22.03.2026), குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரும் பேருந்தில் பயணித்தபோது, தேநீர் அருந்துவதற்காக மொனராகலை - குடாஓயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், பயணிகள் தமது பொதிகளை ஆசனத்தில் வைத்துவிட்டு உணவகத்திற்குச் சென்றதை பயன்படுத்திக்கொண்ட சந்தேகநபர், அவற்றை திருடி தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்துள்ளனர்.
பெறுமதியான பொருட்கள் மீட்பு
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் கண்டி - கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் மற்றொரு பேருந்தில் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார், குடாஓயா பகுதியில் அந்த பேருந்தை வழிமறித்து சோதனை செய்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஒரு ஐபாட் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam