இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி: எரிபொருள் - மின்சாரம் குறித்து அனைவருக்குமான அவசர அறிவுறுத்தல்

Fuel Price In Sri Lanka Power cut Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Mayuri Mar 24, 2026 08:00 AM GMT
Report

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பல தரப்பினரும் அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதோடு தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்மெனவும் அரச தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையையும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டியது இலங்கை பிரஜைகளான நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

மின் விளக்குகள், மின் விசிறிகள், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பயன்படுத்தாத போது உடனடியாக அணைக்கவும்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்.

குளிரூட்டிகள் (AC) பயன்பாட்டை குறைக்கவும். பகல் நேரத்தில் ஜன்னல்களைத் திறந்து வைத்து, விளக்குகளை அணைக்கவும்.

தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துங்கள். இது மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.

இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி: எரிபொருள் - மின்சாரம் குறித்து அனைவருக்குமான அவசர அறிவுறுத்தல் | Fuel And Electricity Crisis In Sri Lanka

பொது போக்குவரத்து (பேருந்து, தொடருந்து), சைக்கிள் அல்லது நடைப்பயணத்தை அதிகம் பயன்படுத்துங்கள். (கோவிட் காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி நிலையின் போது பலரும் சைக்கிள் பாவனையை விரும்பியமை குறிப்பிடத்தக்கது)

சுற்றுலாக்கள், உல்லாச பயணங்கள் போன்ற விடயங்களில் ஈடுபடுவதை நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு பிற்போடல்.

வாகனங்களில் குளிரூட்டிகளை பயன்படுத்துவதையும் குறைத்தல்.

இதேவேளை அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! அடுத்த நொடியே எரிபொருள் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! அடுத்த நொடியே எரிபொருள் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்

வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்

உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகை தரும் போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

களப்பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.

முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும், குளிரூட்டிகளுக்கு பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தவும்.

நிறுவனங்களில் மின்தூக்கி பயன்பாட்டைக் குறைத்து படிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும்.

உள்ளூராட்சி நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மின்விளக்குகளை தேவையற்ற நேரங்களில் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், பகல் நேரங்களில் நிறுவனங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி: எரிபொருள் - மின்சாரம் குறித்து அனைவருக்குமான அவசர அறிவுறுத்தல் | Fuel And Electricity Crisis In Sri Lanka

நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறித்த கடமை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும், அத்தியாவசியத் தேவை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த வெளிப்புறத் தாக்கங்களின் போது அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை.. அரச நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய அறிக்கை

எரிபொருள் பற்றாக்குறை.. அரச நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய அறிக்கை

ஆகவே மக்களுக்கு சுமையை ஏற்றாத வகையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களாகிய நாம் பொறுப்புடன் ஒத்துழைப்பதும், நம்மால் முடியுமான ஆதரவினை வழங்குவதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் நினைவில் கொள்வது கட்டாயமாகும்.

இதன்மூலம் எரிபொருளுக்கான வரிசைகள் உருவாகுவதையும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதையும் மற்றும் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதையும் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Mayuri அவரால் எழுதப்பட்டு, 24 March, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US