காட்டு யானையை சுட்டுக் கொன்ற நபர் கைது
அநுராதபுரம் - ஹிடோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்ல குளப் பகுதியில் காட்டுயானை ஒன்றைச் சுட்டுக் கொன்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளாார்.
குறித்த சம்பவம், நேற்று (23.05.2024) கைதுச் செய்யப்பட்டுள்ளாதாக திர்ப்பனய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலக்கம் 538, பழையகுளம், ஹல்மில்லக்குளம், தருவில பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களம்
குறித்த இடத்தில் காட்டுயானைக் கூட்டம் நேற்று (23.05.2024) அதிகாலை 1.30 மணியளவில் பயிர்களை நாசம் செய்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தை விரட்ட முற்பட்ட வேளை , யானையொன்று சந்தேக நபரை துரத்தியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபர் கையில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் காட்டு யானையைச் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 7 அடி, 3 அங்குலம் உயரம் கொண்ட 20 வயதுடைய ஆண் யானையே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாது.
திற்பனை வனவிலங்கு அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அலுவலகத்தின் தள உதவியாளர் உள்ளிட்ட குழுவினர் எச்.என்.பி.இ. ஹேரத்(HNPE. Herath), சம்பவம் நடந்த இடத்தை ஆய்விற்குற்படுத்தியுள்ளார்.
சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |