அம்பாறையில் ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் கைது- பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (07.03.2026) இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கையில் மின்வெட்டு..! பொது மக்களுக்கு எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை நகரின் திஸ்ஸ புறவில் இன்று (07.03.2026) சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரை கைது செய்ய பொலிஸார் தங்கள் தகவல் வழங்குபவரை பயன்படுத்தி, 72 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரூபாய் 2000-க்கு சந்தேக நபரிடமிருந்து கொள்வனவு செய்துள்ளனர்.
விற்பனை செய்தவர் கைது
இதன்போது, ஹெரோயின் விற்பனை செய்து வந்த திஸ்ஸ புறத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை சோதனை செய்தபோது விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 70 மில்லி கிராம், 80 மில்லி கிராம் மற்றும் 90 மில்லி கிராம் எடையுடைய மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் மற்றும் ரூபாய் 6000 பணமும் அவரிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், ஹெரோயின் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri