தொழிற்சாலையில் ஹெரோயின் விற்பனை செய்தவர் கைது
சேதவத்த வேரகொடல்ல கறுத்த பாலத்திற்கு அருகில் 40 கிராம் மற்றும் 737 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் நேற்று கிராண்ட்பாஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிராண்ட்பாஸ் காவல் நிலைய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வேரகொடல்ல பகுதியில் உள்ள ஒரு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஹெரோயின் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பன மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



