தமிழர் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி போதைப்பொருள் விற்பனை!
திருகோணமலை- கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருந்தகத்தின் மூலமாகவே இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருட்கள் பறிமுதல்
குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி திஸ்ஸ விதானகேவின் வழிகாட்டலின் கீழ், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.எம். செனவிரத்ன தலைமையிலான குழுவினர் இன்று காலை குறித்த பகுதியில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின் போது, எட்டு பெட்டிகளில் இருந்து மொத்தம் 10,920 போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் மொத்த பெறுமதி ரூ. 21,84,000 ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
பாதுகாப்பற்ற வகையில் மாணவர்களை குறிவைத்து, போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டமை பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
