யாழில் நூற்றுக்கணக்கான சிகரெட் பெட்டிகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம்- அச்சுவேலி பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட் பெட்டிகளை விற்க முயன்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (6) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, புதுக்குடியிருப்பை சேர்ந்த 22 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.அச்சுவேலி பேருந்து நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்பெட்டிகளை விற்பதற்காக இளைஞர் ஒருவர் வருகை தந்துள்ளார் என பொலிஸாருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை 160 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா என மதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க Cineulagam
