பசுமை தோட்டத்திற்குள் கஞ்சாவை பயிரிட்ட நபர் கைது
நுவரெலியா தர்மபாலபுர பிளேக்பூல் ருவான் எலிய பிரதேசத்தில் வீடொன்றில் உள்ள பசுமை தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை பயிரிட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ரகமான குஷ் கஞ்சா செடி
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தே நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாட்டு ரகமான குஷ் என்ற அழைக்கப்படும் கஞ்சா செடிகளை தோட்டத்திற்குள் சூட்சுமான முறையில் பயிரிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று அடி உயரம் வரை வளர்ந்த 71 கஞ்சா செடிகளை அதிரடிப்படையினரும் பொலிஸாரும் கைப்பற்றியுள்ளனர்.
எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் நீண்டகாலமாக சந்தேக நபர் கஞ்சாவை பயிரிட்டு வந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.











பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
