நடுக்கடலில் மீட்கப்பட்ட கஞ்சாவை விற்க முயன்ற நபர் கைது (Photos)
கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற கஞ்சா பொதிகளை மீட்டு விற்பனை செய்ய முற்பட்ட கடற்றொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடுக்கடலில் கஞ்சா மீட்பு
தமிழக கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் கஞ்சா பொதிகளை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போதே கடலில் மிதந்து கொண்டிருந்த கஞ்சா பொதிகளை இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற குறித்த கடற்றொழிலாளர் ஜனாதன் மீட்டுள்ளார்.
பின்னர் மீட்கப்பட்ட பொதிகளை தமது தோப்பில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்ற போதே இராமேஸ்வரம் தனிப்பிரிவு பொலிஸார் நல்லுச்சாமி, ராமமூர்த்தி ஆகியோர் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 30 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



