யாழில் நோயாளியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது!
தெல்லிப்பழை மனநல சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்றையதினம் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 02ஆம் திகதி சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடு
இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி, அந்த வைத்தியசாலையில் பணிபுரியும் துப்பரவு பணியாளரால் அந்த பெண் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்தான முறைப்பாடு இன்றையதினம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் இன்றையதினம் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்:- கஜிந்தன்
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri