வடமராட்சி- கட்டைக்காட்டு பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது
யாழ்ப்பாணம்- வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(17.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் கடந்த 15 ஆம் திகதியன்று நான்கு வீடுகள் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.
கைது
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி இருந்தார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.