திருகோணமலையில் நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த சந்தேகநபர் கைது (Photos)
சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே நிலாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணியொன்றில் கஞ்சா தோட்டம் ஒன்றை வளர்த்து வருவதாக திருகோணமலை மாவட்ட அரச புலனாய்வு சேவை பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் வீட்டின் பின்புறம் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்டிருந்த 08 கஞ்சா செடிகள் (உயரம் 08 அங்குலம் முதல் 05 அடி வரை) மற்றும் 1 கிலோ 361 கிரேம் காயவைத்த நிலையில் கஞ்சா செடிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் 54 (A) கீழ் பயிர்ச்செய்கை மற்றும் கஞ்சா போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களின் கீழ் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.





சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan