நுவரெலியாவில் வீட்டை உடைத்து திருட முற்பட்ட ஒருவர் கைது
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகாஸ் தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் நேற்று (19) இரவு தனி வீடு ஒன்றினை உடைத்து உள்நுழைந்த குற்றவாளி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியை இன்று (20) பொலிஸார் கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள்
குறித்த குற்றவாளி வீட்டின் பின்புற நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து வீட்டில் எந்தவிதமான பொருள்களையும் எடுத்துச் செல்லாமல் மீண்டும் அதே நுழைவாயில் ஊடாக வெளியேறும் காட்சி அந்த வீட்டில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசி ரீவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரதான குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியாவில் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரா என்ற கோணத்திலும் நுவரெலியா தடயவியல் பொலிஸாரோடு இணைந்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- செ.திவாகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan