பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது
துபாயிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2.1 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்த முற்பட்ட போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள போதைப்பொருள் பணியகத்தின் பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்
இதன்போது அவரது பைகளில் இருந்து 21,400 சிகரட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவை இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும், துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |