மட்டக்களப்பில் 14 வருடமாக தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது
மட்டக்களப்பில் உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி 14 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலே நேற்று(11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் இரு சிறுவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்த நிலையில் உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 14 வருடங்களாக தலைமறைவாகி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் முடித்த நிலையில்,மனைவியின் இரு பிள்ளைகளை அடித்து சித்திரவரை செய்த குற்றச்சாட்டில் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் மட்டு உயர் நீதிமன்றில் கடந்த 2016 பெப்ரவரி 25ஆம் திகதி குறித்த நபரை குற்றவாளி என இனங்கண்டு கொண்ட நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டது.
அபராத தொகையை 3 மாதத்தில் செலுத்த தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 2 இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
குறித்த நபர் தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர் அரசரட்டணம் கோகுலன், பொலிஸ் கான்ஸ்டபிள் தேவா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹூசையன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் அரசரட்டணம் கோகுலன் குறித்த குற்றவாளியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமத்தியமாக பேசி நேற்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
