பிரித்தானியாவில் கத்தியுடன் திரிந்த நபர் - பொலிஸார் சுட்டுக்கொலை
பிரித்தானியாவில் டெர்பியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு வெளியே கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அஸ்காட் டிரைவ் காவல் நிலையத்தின் வாகன தரிப்பிட பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.03 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவர்கள் வரும் வரை சம்பவ இடத்தில் வைத்து அவருக்கு அதிகாரிகள் முதலுதவி வழங்கியுள்ளனர்.
ஏர் ஆம்புலன்ஸ் வரவழைப்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆயுதமேந்திய அதிகாரிகள் நிலைமையைச் சமாளித்ததால் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டதாக டெர்பிஷயர் காவலர் கூறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் போடப்பட்டுள்ளதாகவும், அஸ்காட் டிரைவ் மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
