4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனம்
4,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து காணாமல் போன மமொத் எனப்படும் உயிரினத்தை மீண்டும் உருவாக்க (de-extinction company) எனும் அமெரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஆசிய யானை மற்றும் மமொத் ஆகிய இரண்டு விலங்குகளின் மரபணுக்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக மில்லியன் கணக்கான டொலர்கள் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
மேலும் மமொத் விலங்குகளை மீண்டும் உருவாக்க, ஒரு மமொத் கரு உருவாக்கப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த விலங்குகள் தற்போதைய பூமி சூழலுக்கு (குறிப்பாக காடுகளுக்கு) எப்படி இசைவாக்கமடையும் என்பதை இன்னும் உறுதியாக கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையும், மமொத்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பம்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா யானை மையத்தில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம் இதற்கு ஏற்றது என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |