வன்னி மாவட்டத்தில் மல்வத்து ஓயா திட்டம் முன்னெடுக்கப்படவில்லை: பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டு
ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என கூட்டுறவு துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘‘கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தி திட்டம்‘‘ தொடர்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும், ஏனைய பிரதேச மக்களைக் குடியேற்றும் திட்டமாகவே இது காணப்படுவதாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மல்வத்து ஓயா திட்டம்
ரூபா 47.18 பில்லியன் மதிப்பீட்டில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதுடன், தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி மண்டலமொன்றை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்தின் யோத குளம் மற்றும் அகத்திமுப்பு குளத்தின் கீழ் 30,690 ஏக்கர் நெற்பயிரச்செய்கை நிலங்களின் பயன்பாட்டுச் செறிவை அதிகரித்தல் மற்றும் நீர்மின் உற்பத்தி என்பன இதன் முக்கிய நோக்கங்களாகும்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டில் ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ் மல்வத்து ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று காணிகள் வழங்குவது குறித்தும், அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலையில் இரு வருடங்களில் 2375 அபிவிருத்தித் திட்டங்கள்! அபிவிருத்தியில் இனவாதமோ பிரதேசவாதமோ இல்லை – பிரதி அமைச்சர்
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam