பசிலுக்கு எதிரான மல்வானை வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தி குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் வழக்கு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலை காரணமாகவும், திருகுமார் நடேசன் சுகவீனம் காரணமாகவும் மன்றில் முன்னிலையாகவில்லை என அவர்களது சட்டத்தரணிமன்றில் தெரிவித்துள்ளார்.