இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் தனுஷ்கோடியில் கைது (Photos)
தனுஷ்கோடி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6)இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கைக்குச் செல்வதற்கு தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மெரைன் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரியவந்துள்ளது.

வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan