லசித் மலிங்கவின் புதிய முயற்சி! கிடைத்துள்ள அமோக வரவேற்பு
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்க ஆரம்பித்துள்ள 'வேகப்பந்து வீச்சாளர் தேடல்' (Fast Bowler Talent Search) திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் இதில் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போர் பதற்றங்களின் மத்தியில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி! வட கொரியா கடும் எச்சரிக்கை
மலிங்கவின் முயற்சி
அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதால், பதிவு செய்வதற்கான இணையத்தள இணைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புதிய விண்ணப்பதாரர்களுக்காக 2026 ஏப்ரல் 14-ஆம் திகதி மீண்டும் இந்த இணைப்பு திறக்கப்படும்.

இந்தத் திட்டம் மிகவும் திட்டமிட்ட வகையில் 10 கட்டங்களாக நடைபெறவுள்ளது: மொத்தம் பதிவு செய்துள்ளவர்களில் இருந்து, ஒரு கட்டத்திற்கு 350 பந்துவீச்சாளர்கள் வீதம் தெரிவு செய்யப்படுவர்.
மாகாண மற்றும் மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது 350 வீரர்களின் பெயர்ப் பட்டியல் நாளை வெளியிடப்படும்.
மலிங்கவின் இந்த முயற்சி இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri