பாகிஸ்தானில் அடித்து கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்தவர் விசாரணைக்கு அழைப்பு
பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்தகுமார அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க, அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட மலிக் அட்னான் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க வருமாறு பாகிஸ்தானின் விசேட விசாரணை அமர்வு, மலிக் அட்னானுக்கு அறிவித்தலை அனுப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 33 பேரை பாகிஸ்தானிய அதிகாரிகள் இன்று பயங்கரவாத சம்பவங்களை விசாரணை செய்யும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு்ள்ளனர்.
இதனையடுத்து, சியால்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
இதில் பிரதான தாக்குதல்தாரிகள், சம்பவத்தின் காணொளி காட்சிகள் மூலம் இனங்காணப்பட்டனர்.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
