மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பிரதீப் என்பவர் உயிரிழந்துள்ளார்.
20 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று (20.09.2023) உயிரிழந்துள்ளார்.
'மாளிகாவத்தை பிரதீப்' என அழைக்கப்படும் 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
கடந்த (01.09.2023) ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தல்
இந்தச் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'கெசல்வத்த தினுக' குழுவினரால் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 'பஞ்சிகாவத்தே நெவில்' என்பவரின் சகாவும் ஆவார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
